பொதுத்தேர்விற்காக 144 தடை உத்தரவு!

உத்தரப்பிரதேசத்தில் பள்ளி பொதுத் தேர்வக்காக ஜி.பி. நகர் மாவட்டத்தில் 144 தடை

By kavitha | Published: Feb 17, 2020 06:40 AM

உத்தரப்பிரதேசத்தில் பள்ளி பொதுத் தேர்வக்காக ஜி.பி. நகர் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்த தடையானது 2 மாத காலத்திற்கு நீடிக்கும் துணை போலீஸ் ஆணையர் தகவல் தெரிவித்துள்ளார் உத்தரப் பிரதேச மாநிலத்தில் பள்ளி பொதுத் தேர்வுகள் (சனிக்கிழமை) அன்று தொடங்கியது.இந்நிலையில் தேர்வுகள் தற்போது நடைபெற்று வருகின்றது.பொதுததேர்வு எழுதும் மாணவர்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாவகையில் ஜி.பி. நகர் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. 'மேலும் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் ஏற்படாத வண்ணம் குறிப்பிட்ட பகுதியில் 144 தடை உத்தரவு ஏற்படுத்தப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.இது குறித்து நொய்டா துணை போலீஸ் ஆணையர் நிதின் திவாரி கூறுகையில் இந்த அறிவிப்புக்கு பொதுமக்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். இந்த உத்தரவானது இன்னும் இரண்டு மாதங்களுக்கு அமலில் இருக்கும் என்று தெரிவித்தார். உத்திரபிரதேசத்தில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
Step2: Place in ads Display sections

unicc