‘தடம்’ இயக்குனருடன் கைகோர்த்த உதயநிதி ஸ்டாலின்! படத்தில் ஹீரோயின் யார் தெரியுமா?!

நடிகரும் தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் தற்போது மிஸ்கின் இயக்கத்தில் சைக்கோ எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில்  உதயநிதி மாற்றுத்திறனாளியாக நடித்துள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது. மேலும், இரவுக்குஆயிரம்கண்கள் படத்தை இயக்கிய மு.மாறன் இயக்கத்தின் கண்ணை நம்பாதே எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

அதற்கடுத்ததாக தடையறத் தாக்க, மீகாமன், தடம் ஆகிய படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்க உள்ளார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இப்படத்தின் ஹீரோயினாக மேகா ஆகாஷ் நடிக்க உள்ளாராம். இந்த படம் பற்றிய அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.