டிடிவி.தினகரன் விவகாரம்!தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு….

டெல்லி உயர்நீதிமன்றம் , ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ டிடிவி தினகரன் கோரும் கட்சியின் பெயர், சின்னத்தை ஒதுக்குமாறு, தேர்தல் ஆணையத்திற்கு,உத்தரவிட்டிருக்கிறது.

சென்னை ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் வெற்றிக்குப் பின்னர், டெல்லி உயர்நீதிமன்றத்தில், டிடிவி தினகரன் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், தனது அணிக்கு, கட்சி பெயரையும், சுயேச்சையாக தான் போட்டியிட்ட குக்கர் சின்னத்தையும் ஒதுக்குமாறு கோரியிருந்தார். மேலும், அனைத்திந்திய அம்மா திராவிட முன்னேற்ற கழகம், அம்மா எம்ஜிஆர் முன்னேற்றக் கழகம், அல்லது எம்ஜிஆர் அம்மா முன்னேற்றக் கழகம் ஆகிய மூன்று பெயர்களில் ஒன்றை தங்கள் அணிக்கு ஒதுக்குமாறு தினகரன் கோரிக்கை விடுத்திருக்கிறார்.

உள்ளாட்சி தேர்தல் உள்ளிட்ட தேர்தல்களை எதிர்கொள்ளும் வகையில், சின்னத்தையும், கட்சிப் பெயரையும் ஒதுக்குமாறு, தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட டிடிவி தினகரன் மனு செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை நடைபெற்ற முடிந்த நிலையில், டெல்லி உயர்நீதிமன்றம் இன்று காலை 10.45 மணியளவில் தீர்ப்பு வழங்கியது. ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ டிடிவி தினகரன் கோரும் சின்னத்தையும், கட்சிப் பெயரையும், தலைமைத் தேர்தல் ஆணையம் ஒதுக்குமாறு உத்தரவிட்டது. டெல்லி உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பின் மூலம், டிடிவி தினகரன் கோரிய குக்கர் சின்னம் கிடைக்கும் என்றும், மேலும், நீதிமன்றத்தின் மூலம் முன்வைக்கப்பட்ட, மூன்று பெயர்களில் ஒன்று கிடைக்கவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment