இன்று மார்ச் 20ம் நாள் சர்வதேச மகிழ்ச்சி தினம்…!

சந்தோஷத்தில் பெரிய சந்தோஷம் மற்றவர்களை சந்தோஷப் படுத்துவதுதான் . இன்றேனும் மற்றவர்களை மகிழ்ச்சிப்படுத்துங்கள்.ஐ.நா. சபையின் கீழ் இயங்குகிற ‘சஸ்டைனபிள் டெவலப்மென்ட் சொல்யூஷன்ஸ் நெட்வொர்க்’ என்ற அமைப்பு உலகிலேயே மகிழ்ச்சிகரமான 158 நாடுகளை வரிசைப்படுத்தி உள்ளது.
தனிநபர் வருமானம், மனிதர்களின் ஆரோக்கியமான ஆயுட்காலம், சமூக ஆதரவு, ஊழல் மற்றும் வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களை தேர்வு செய்வதில் சுதந்திரம் ஆகியவை மகிழ்ச்சிக்கான அடிப்படை அம்சங்களாக கருதப்படுகின்றன. இவற்றின் அடிப்படையில் மகிழ்ச்சிகரமான நாடுகளைப் பட்டியலிட்டுள்ளது இந்த அமைப்பு.இப்பட்டியலில் இந்தியா 137 ஆவது இடத்தை பிடித்துள்ளது. இலங்கை பாகிஸ்தான், நேபாளம் முதலான அண்டை நாடுகள் இந்தியாவை விட முன்னேறிய நிலையில் உள்ளன. உலக மகிழ்ச்சி நாளில் இந்தியாவுக்கு இது மகிழ்ச்சியான செய்தி இல்லை.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment