தினம் ஒரு திருப்பாவை

  • கோதை நாச்சியார் அருளிய திருப்பாவை கோவில்களில் எல்லாம் மார்கழி மாதத்தில் ஒலிக்ககூடிய பதிகம்
  • மனமுருகி பாடி அந்த மாயவனை வழிபட்டால் எண்ணியது ஈடேறும் என்பதில் சந்தேகமில்லை. 

திருப்பாவை

பாடல்: 13

புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்

கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்ப்

பிள்ளக ளெல்லாரும் பாவைக் களம்புக்கார்

வெள்ளி யெழுந்து வியாழ முறங்கிற்று;

புள்ளும் சிலம்பினகான் போதரிக் கண்ணியாய்!

குள்ளக் குளிரக் குடைந்துநீ ராடாதே

பள்ளிக் கிடத்தியோ? பாவாய்! நீ நன்னாளில்

கள்ளம் தவிர்த்து கலந்தேலோ ரெம்பாவாய்

-ஸ்ரீ ஆண்டாள் –

பாடல் விளக்கம் :

நம் பெருமான் பறவை வடிவமாக வந்த பகாசுரனுடைய வாயைப் பிளந்து எறிந்தவன்,கொடிய அரக்கனாகிய இராவணன் தலைகள் பத்தினையும் அறுத்து அழித்தவன் அவனுடைய வீரப் புகழைப் பாடிக் கொண்டு பிள்ளைகள் எல்லாரும் பாவை நோன்பை நோற்கும் இடத்திற்கும் போய்ப் புகுந்தனர் விடிவெள்ளி தோன்றி விட்டது.வியாழம் மறைந்துவிட்டது,பறவைகள் ஒலிகின்றன.மலர் போன்ற அழகிய இரேகை பொருந்திய விழியுடையவாளே!பாவையயே இந்த நல்ல நாளில் நீ உன் கள்ளத்தனத்தை விட்டுவிட்டு எங்களோடு கலந்து கொண்டு குளிரக்குளிரக் குடைந்து நீராடாமல்,கிடக்கையிலே கிடக்கின்றாயா? என்று அருளுகிறார் கோதை நாச்சியார்.

author avatar
kavitha