தெலுங்கிலும் தயாராகிறது தளபதியின் மெகா ஹிட் திரைப்படம்!!!

தளபதி விஜய் - அட்லி கூட்டணியில் உருவான முதல் படம் தெறி.  தெலுங்கில்

By manikandan | Published: Mar 13, 2019 08:00 AM

  • தளபதி விஜய் - அட்லி கூட்டணியில் உருவான முதல் படம் தெறி. 
  • தெலுங்கில் ஏற்கனவே இப்படம் டப் செய்யப்பட்டு ரிலீஸாகியுள்ளது.
  • இந்த ரீமேக்கில் ரவிதேஜா - கேத்தரின் தேரேசா ஹீரோ - ஹீரோயினாக நடிக்க உள்ளனர்.
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் தெறி. இப்படத்தை கலைப்புலி.எஸ்.தாணு தயாரித்திருந்தார். சமந்தா , எமி ஜாக்சன் ஆகியோர் ஹீரோயகன்களாக நடித்திருந்தனர். இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்திருந்தார். இந்த படம் தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு ரிலீஸானது. இருந்தும் தற்போது இத்திரைப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட உள்ளது. இத்திரைப்படத்தில் தெலுங்கு சினிமாவின் 'மாஸ் மஹாராஜா' ரவி தேஜா நடிக்க உள்ளார். இப்படத்தில் கேத்தரின் தெரேசா ஹீரோயினாக நடிக்க உள்ளார். சந்தோஷ் ஸ்ரீநிவாஸ் என்பவர் இயக்க உள்ளார். ரவி தேஜா தற்போது 'டிஸ்கோ ராஜா' எனும் படத்தில் நடித்து வருகிறார். அது முடிந்ததும் தெறி ரிமேக்கில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. DINASUVADU
Step2: Place in ads Display sections

unicc