கஜா புயலின் வேகம் மணிக்கு 12 கிலோ மீட்டராக அதிகரிப்பு…!வானிலை ஆய்வு மையம்

4 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வந்த கஜா புயலின் வேகம் மணிக்கு 12 கிலோ மீட்டராக அதிகரிப்பு என்று  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Image result for GajaCyclone

இது தொடர்பாக  வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், சென்னை மற்றும் நாகை அருகே உள்ள கஜா புயல் மணிக்கு 12 கி.மீ. வேகத்தில் நகர்கிறது .அதேபோல் 4 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வந்த கஜா புயலின் வேகம் மணிக்கு 12 கிலோ மீட்டராக அதிகரித்துள்ளது.

சென்னைக்கு கிழக்கே 750 கி.மீட்டர் தொலைவிலும் நாகைக்கு வடகிழக்கே 840 கி.மீட்டர் தொலைவிலும் புயல் மையம் கொண்டுள்ளது. தெற்கு தென்மேற்கு நோக்கி நகரும்  கஜா புயல் பாம்பன் – கடலூர் இடையே நவம்பர் 15-ல் கடக்க வாய்ப்பு உள்ளது. நவம்பர் 15-ல் வட தமிழகம், தென் கடலோர மாவட்டங்களில் கன மழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment