நீல நிறத்தில் காணப்பட்ட கடற்அலைகள் ரசித்து பார்த்த பொதுமக்கள்!

சென்னையில் பொழுது போக்கு இடத்தில் ஒன்றான கடற்கரையில் நேற்று விடுமுறை என்பதால் மக்களின் கூட்டம் சற்று அதிகமாக இருந்தது.இந்நிலையில் இரவு திடீர்ரென கடல் அலைகள் நீல நிறமாக காட்சியளித்தது.

இதனை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.மேலும் இந்த செய்தி பலருக்கு பரவியதால் கடலுக்கு பலர் படையெடுத்து வந்தனர்.டயனோப்ளாஜலேட்ஸ் என்ற பாசி காரணமாக கடற் நீல நிறத்தில் காணப்பட்டதாக கூறப்படுகிறது.அந்த பாசிகள் சிறு மீன்களிடம் இருந்து தங்களை காப்பாற்றி கொள்வதற்காக நீல நிறத்தை வெளியிடுமாம் அந்த வெளிச்சத்தில் பெரியமீன்கள் சிறிய மீன்களை தின்று விடுமாம்.

இந்த அரியவகை நிகழ்வு திருவான்மியூர் மற்றும் நீலாங்கரை கடற்கரை பகுதியில் காணப்பட்டது. சமீபத்தில் பெய்த மழையால் கடலில் சேர்ந்த கழிவுகளில் இருந்த நைட்ரஜன் மூலமாக இந்த வெளிச்சம் ஏற்பட்டு இருக்கலாம் என தேசிய கடலோர ஆராய்ச்சி மையமான NCCR விஞ்ஞானி பிரவாகர் மிஸ்ரா கூறி உள்ளார்.

author avatar
murugan