டுவிட்டரில் இணைந்ததாக கூறியது முற்றிலும் பொய் - நடிகர் செந்தில்.!

நடிகர் செந்தில் ட்வீட்டர் பக்கத்தில் இணைந்துள்ளதாக வெளியாகிய தகவல் வதந்தி

By ragi | Published: May 06, 2020 07:02 PM

நடிகர் செந்தில் ட்வீட்டர் பக்கத்தில் இணைந்துள்ளதாக வெளியாகிய தகவல் வதந்தி அவரே வெளியிட்ட வீடியோ. 

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக முந்தைய காலகட்டத்தில் கொடி கட்டி பறந்தவர் தான் செந்தில். இவர் மற்றும் கவுண்டமணி காம்போ பார்ப்பவர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும். இப்போதும் இவர்கள் ரசிகர்கள் பலரின் பேவரட்டாக உள்ளார்.  சில மணி நேரங்களுக்கு முன்பு இவர் டுவிட்டரில் புதிதாக இணைந்துள்ளதாக  சில தகவல்கள் வெளியாகியிருந்தது. 

இந்த நிலையில் தற்போது இதனை குறித்த உண்மையை செந்தில் வீடியோ மூலம் வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது, எனக்கு தெரிந்தது பத்திரிகை ஊடகம் போன்ற இரண்டு ஊடகங்கள் தான் எனக்கு தெரியும் என்றும்,மற்ற ஊடகங்கள் எதுவும் எனக்கு தெரியாது. இந்த டுவிட்டர், பேஸ்புக் ஆகியவற்றில் இருப்பதாக கூறியது முற்றிலும் பொய், யாரும் நம்பாதீர்கள். அதில் ஒன்றிலும் நான் இல்லை என்றும் கூறியுள்ளார். மேலும் கொரோனா வைரஸிலிருந்து பாதுகாக்க மாஸ்க் அணியவும், கைகளை சுத்தமாக வைத்துக் கொள்ளவும் வலியுறுத்தியுள்ளார். இதிலிருந்து அவர் எந்த ஒரு சமூக வலைத்தள பக்கத்திலும் இல்லை என்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

Step2: Place in ads Display sections

unicc