கிருமி நாசினி ஏற்றுமதிக்கு தடை – மத்திய அரசு உத்தரவு

ஆல்கஹாலை அடிப்படையாக கொண்ட சானிடைசர் ஏற்றுமதிக்கு தடை வித்தித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

சானிடைசர் எனப்படும் கிருமி நாசினி ஏற்றுமதிக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதாவது, ஆல்கஹாலை அடிப்படையாக கொண்ட சானிடைசர் ஏற்றுமதிக்கு தடை வித்தித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கைகளை சுத்தப்படுத்தும்போது கொரோனா வைரஸை அழிப்பதில் சானிடைசர் முக்கிய பங்கு வகித்து வருகிறது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் தங்கள் கைகளை அடிக்கடி கிருமி நாசினி கொண்டு கழுவி சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என மத்திய மாநில அரசுகள் அறிவுறுத்தி வந்தன. 

அதன்படி, மக்களும் கைகளை சானிடைசரை கொண்டு சுத்தம் செய்து வருகின்றனர். இதனால் சானிடைசர் மக்களிடையே அத்தியாவசிய பொருளாக மாறியது. அதில், ஆல்கஹால் கலந்த சானிடைசரை பலரும் அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். இதன் விளைவை அறிந்து அதனை தவிர்க்க வேண்டும் என மத்திய அரசு முடிவெடுத்து ஆல்கஹாலை அடிப்படையாக கொண்ட சானிடைசர் ஏற்றுமதிக்கு தடை வித்தித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்