தி.மு.க.வில் இணைந்த முன்னாள் பா.ம.க எம்.எல்.ஏ தமிழரசு

  • ஓமலூர் தொகுதி முன்னாள் பா.ம.க எம்.எல்.ஏ தமிழரசு சேலத்தில்

By Fahad | Published: Apr 08 2020 09:30 AM

  • ஓமலூர் தொகுதி முன்னாள் பா.ம.க எம்.எல்.ஏ தமிழரசு சேலத்தில் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார்.

தமிழகத்தில் வருகிற அடுத்த மாதம் 18-ஆம் தேதி மக்களவை தேர்தலும், இடைத் தேர்தலும் நடைபெற உள்ளது. அனைத்து கட்சிகளும் தங்களது பிரச்சாரத்தை தீவிரமாக  நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று சேலத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.இதையடுத்து  ஓமலூர் தொகுதி முன்னாள் பா.ம.க எம்.எல்.ஏ தமிழரசு சேலத்தில் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார்.

மேலும் சேலம் மாவட்ட பா.ம.க செயலாளர் ஜெயவேல் உள்பட நூற்றுக்கணக்கான பா.ம.கவினரும் தி.மு.கவில் இணைந்தனர்.

 

Related Posts