ஊரடங்கை கண்டிப்பாக நீட்டிக்க வேண்டும் ! கடிதமும் எழுதவுள்ளேன்-புதுவை முதல்வர்

ஊரடங்கை கண்டிப்பாக நீட்டிக்க வேண்டும் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி 

By venu | Published: Apr 09, 2020 08:32 AM

ஊரடங்கை கண்டிப்பாக நீட்டிக்க வேண்டும் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி  தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனாவால் 5000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 140-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். எனவே கொரோனாவை தடுக்கும் நோக்கில் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதற்குஇடையில் தான் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் என்று செய்திகள் அதிகம் வலம் வந்தது.இதற்கு இடையில் பிரதமர் மோடி, அனைத்து கட்சி கூட்டம் , மக்கள் பிரதிநிதிகள், வல்லுநர்கள் உடன் ஆலோசனை நடத்தினார்.அந்த கூட்டத்தில் மாநில அரசுகள், கொரோனா தொற்றை கட்டுப்படுத்த ஊரடங்கை மேலும் நீடிக்க வேண்டும். என கோரிக்கை வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கூறுகையில்,கொரோனாவில் இருந்து மக்களை காப்பாற்ற வருகின்ற  14-ஆம் தேதிக்கு பிறகு தேவைப்பட்டால்  ஊரடங்கு சட்டத்தை நீட்டிக்க மாநில அரசு உதவ தயாராக உள்ளது. இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுத  உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Step2: Place in ads Display sections

unicc