ஒருமுறை கொரோனா பாதித்தவரை மறுமுறை கொரோனா தாக்காது – தொற்றுநோய்த்துறை பேராசிரியர்

முதலில் சீனாவில் தனது ஆட்டத்தை தொடங்கிய இந்த கொரோனா வைரஸ் நோயானது, அங்கு ஆயிரக்கணக்கானோரின் உயிரை பறித்துள்ளது. இதனை தொடர்ந்து இந்த நோய் மற்ற நாடுகளிலும் தீவிரமாக பரவியுள்ள நிலையில், ஒவ்வொரு நாட்டு அரசும் இதனை கட்டுப்படுத்துவதற்கான பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்நிலையில், தென்கொரியாவில் 51 குணமான பேருக்கு மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.  இங்கிலாந்தின் ஈஸ்ட் ஆங்கிலியா பல்கலைக்கழக தொற்றுநோய் துறை பேராசிரியர் பால் ஹண்ட் அவர்கள் கூறுகையில், ‘பரிசோதனைகள் தவறாக இருக்க வேண்டும். குணம் அடைந்தவருக்கு மறுமுறை கொரோனா தாக்க வாய்ப்பில்லை.’ என கூறியுள்ளார். 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.