சிவராத்திரியின் பயன்கள் மற்றும் பெண்களின் பங்கு !!!!!

பெண்களுக்கு முக்கியத்துவம்:

                                                 சிவராத்திரி பண்டிகை பெண்களுக்காக விசேஷ முக்கியத்துவத்தை பெற்றுள்ளது. சிவபெருமானை வழிபட்டால், அதுவும் பெண்கள் வழிபட்டால், அவர் எளிதில் அருள் கூர்வார் என்று நம்பப்படுகிறது.

சிவபெருமானை வழிபடுவதற்கு விசேஷ பொருட்கள் என எதுவும் தேவையில்லை. கொஞ்சம் நீரும் வில்வ இலையும் இருந்தால் போது, ஒரு பக்தன் தன் கடவுளின் மனம் குளிரச் செய்யலாம்.

அதனால் தான் மகாசிவராத்திரி என்பது பெண்களுக்கு முக்கியத்துவத்தை அளிக்கிறது. திருமணமாகாத பெண்கள் சிவராத்திரியின் போது விரதம் மேற் கொண்டால்,சிவபெருமானை போன்று நல்ல கணவர் அமைவார் என்றும்.

மேலும் திருமணமான பெண்கள், தங்கள் கணவரும் குடும்பமும் நல்ல படியாக சீரும் சிறப்புமாக இருக்க வணங்குவார்கள் என்று நம்பப்படுகிறது.

சிவராத்திரி பயன்கள்: 

                                     மகா சிவராத்திரி அன்று விரதம் இருப்பதால் தெரியாமல் செய்த பாவங்களும், தெரிந்தே செய்த பாவங்கள் அவை நம்மை விட்டு நீங்கிப் போகும் என்கிறார்கள்.

இவர்தான் சிவராத்திரி விரதம் இருக்கலாம்.இவர் இருக்கக் கூடாது என்ற விதியெல்லாம் கிடையாது. யார் வேண்டுமானாலும் சிவராத்திரி விரதத்தை மேற்கொள்ளலாம்.

author avatar
murugan

Leave a Comment