“புகழ்பெற்ற தஞ்சையிலும் சிலை முறைகேடு”அம்பலபடுத்திய ஐ.ஜி பொன்மாணிக்கவேல்..!!

புகழ்பெற்ற தஞ்சை பெரியகோவிலில் பழங்கால சிலைகள் மாற்றப்பட்டு மோசடி நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில்விரைந்த சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

Related image

உலக புகழ்பெற்ற தஞ்சை பெரியகோவில் பிரகதீஸ்வரர் ஆலயம் புராதன கட்டிடக் கலைகளுக்கும், சோழர்களின் அபாரமான சிற்பக் கலைக்கும் சிறப்பு பெயர் பெற்றது. அங்கு சனிக்கிழமையன்று பிற்பகலில் சிலை கடத்தல் தடுப்புப்பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள், போலீசார் உள்ளிட்டோர் திடீரென வருகை தந்தனர்.

அவர்களில் மப்பிட்டியில் 50 காவலர்கள் கோவில் நுழைவு வாயிலில் பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டனர்.பின்னர், ஐ.ஜி பொன் மாணிக்கவேல் தலைமையிலான போலீசார் கோவிலுக்குள் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

Image result for TANJORE SEARCH PON MANICKAVEL

இந்நிலையில் ஏற்கனவே, 2 மாதங்களுக்கு முன்பு தஞ்சை பெரிய கோயிலிலும், புன்னைநல்லூரில் உள்ள சிவன் கோயிலிலும் சிலைகள் வைக்கப்பட்டிருந்த அறைகளில் ஆய்வு நடத்திய ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் சில பழங்கால சிலைகள் மாற்றப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக கூறியிருந்தார்.இதைத் தொடர்ந்து, குஜராத் மாநிலத்தில் உள்ள அருங்காட்சியகத்திலிருந்து ராஜராஜன் மற்றும் உலகமாதேவி சிலைகள் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Image result for பொன்மாணிக்கவேல் ஆய்வு தஞ்சை

இந்நிலையில், இரண்டாம் கட்டமாக சுமார் இரண்டரை மணி நேர ஆய்வுக்குப் பின், செய்தியாளர்களைச் சந்தித்த சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு ஏடிஎஸ்பி ராஜா ராமன், பழங்கால சிலைகள் மாற்றப்பட்டு , அதற்கு பதில், வேறு சிலைகள் மாற்றப்பட்டுள்ளதா?  என்ற சந்தேகத்தின் பேரில் 2-ம் கட்ட ஆய்வு நடந்ததாகக் கூறினார்.

Related image

சிலைகளுக்கு கீழ், சோழர் காலத்திய தமிழ் உருக்கள் அல்லாமல் தற்காலிக தமிழ் உருக்களில் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தனர்.இந்த தகவல் தமிழக மக்களிடையே அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

உலகபுகழ்பெற்றதும்,தமிழர்களின் சான்றாகவும் வானித்தை நோக்கி கம்பீராக நிற்கும் தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம் அதில் வரலாற்று சிறப்புமிக்க சிலைகள் மாற்றப்பட்டது அனைத்து தரப்புகளிடமும் அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

DINASUVADU

author avatar
kavitha

Leave a Comment