இந்த மாவட்டங்களில் பேருந்துகள் இயங்குவதற்கான தடை தொடர்கிறது.!

தமிழகத்தில் பிரிக்கப்பட்டுள்ள 8 மண்டலங்களில், மண்டலம் 7 மற்றும் 8 இல் பெருத்து இயங்குவதற்கான தடை ஜூன் 30 வரையில் தொடர்கிறது.

மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின் படி, தமிழகத்தில் 5ஆம் கட்ட ஊரடங்கு பல்வேறு தளர்வுகளுடன் ஜூன் 30 வரையில்  தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி, தமிழகம் 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. 

இதில் மண்டலம் 7 (காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு), மண்டலம் 8 ( சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதி) ஆகிய மண்டலங்களை தவிர்த்து, மற்ற மண்டலங்களில் பொதுப்போக்குவரத்தான பேருந்து சேவை 50 சதவீத பயணிகளுடன் மண்டலங்களுக்குளேயே இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட தடங்களில் தனியார் பேருந்துகளும் இயங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.    

மண்டலம் 7 மற்றும் 8 இல் பொதுப்போக்குவரத்திற்கான தடை ஜூன் 30 வரையில் தொடர்கிறது. 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.