அதிகரிக்கும் தங்கம் கடத்தும் விவகாரம்… சென்னை விமான நிலையத்தில் சிக்கியது ஒரு கிலோ தங்கம்…

சென்னை விமான நிலையத்தில் தங்கம் கடத்தல். சுங்க இலாக துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை. சென்னை அண்ணா பன்னாட்டு விமான முனையத்தில்  பிரான்சில் இருந்து ஒமென் வழியாக சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த பிரான்ஸ் நாட்டு குடியுரிமை பெற்ற முகமது ஹாரூன் மரைக்கார் சென்னை வந்தார். அப்போது  அவரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி சுங்க இலாகா அதிகாரிகள் அவரது உடைகளை சோதனை செய்தனர். அதில் அவர், ஆடைக்குள் 1 தங்க சங்கிலி, 2 தங்க கட்டிகள், 70 … Read more

இன்று(05.02.2020) தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு… காலை பத்து மணிக்கு புனித நீர் தெளிக்கப்படுகிறது…

உலகப்புகழ் பெற்ற தென் மேரு என அழைக்கப்படும்  தஞ்சை பெரிய கோயிலின் குடமுழுக்கு  விழா 23 ஆண்டுகளுக்கு பின் இன்று நடக்கிறது. அனைத்து தமிழ் சொந்தங்களும் எதிர்பார்த்துக்கொண்டிருந்த நிகழ்வு இன்று அரங்கேற்றம். இதற்காக ஓராண்டுக்கும் மேலாக இந்திய தொல்லியல் துறையும், தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் என பல்வேறு தரப்பினரும் தீவிர ஏற்பாடுகளை செய்து வந்தனர். இதன் விளைவாக  கடந்த மாதம் 27ம் தேதி பூர்வாங்க பூஜையும், அடுத்து  31ம் தேதி வெண்ணாற்றங்கரை தஞ்சபுரீஸ்வரர் கோயிலில் இருந்து புனிதநீர் … Read more

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று கூடுகிறது அமைச்சரவை… முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்ப்பு…

பரபரப்பான சூழலுக்கு மத்தியில் இன்று அமைச்சரவை கூடுகிறது. கொரோனா வைரஸ் தடுப்பு, தொழில் வளர்ச்சி குறித்து தீவிர ஆலோசனை நடத்தப்பட இருப்பதாக தகவல்.  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று  காலை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பட்ஜெட்டில் அறிவிக்கப்படவுள்ள முக்கிய திட்டங்கள், கொரோனா வைரஸ் தடுப்பு, தொழில் வளர்ச்சி குறித்து ஆலோசனை நடத்தப்பட இருக்கிறது.  தமிழக சட்டப்பேரவையின் இந்த  ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த மாதம் 6ம் தேதி நடைபெற்றது. … Read more

தர்ம யுத்தத்தின் போது அதிமுக ஆட்சிக்கு எதிராக வாக்களித்த விவகாரம்… ஒபிஎஸ் உட்பட 11 எம்எல்ஏ மீதான தகுதி நீக்க வழக்கு இன்று விசாரணை…

அரசு மீது நம்பிக்கை கோரும்  தீர்மானம். கொண்டு வந்த எடப்பாடி இதில் வாக்களிக்காத ஆளும் தரப்பு கட்சியினருக்கு எதிரான வழக்கு இன்று விசாரணை. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 2017-ம் ஆண்டு முதல்வராக பதவி ஏற்ற உடன் பிப்ரவரி மாதம் 18-ந்தேதி தனது அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தை கொண்டு வந்தார்.அப்போது அதிமுக பிளவுபட்டு  தர்மயுத்தம் நடத்திய தற்போதைய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மா.பா.பாண்டியராஜன், செம்மலை, சரவணன் உள்பட 11 சட்டமன்ற உறுப்பினர்கள்  ஆளும் … Read more

கொரோனா வைரஸ் விவகாரம்… தமிழகத்தில் பாதிப்பு இல்லை என சுகாதாரத்துறை அறிவிப்பு…

தமிழகத்தில் இதுவரை யாருக்கும் கொரோனா வைரஸ் அறிகுறி இல்லை என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் வதந்திகளை நம்பவேண்டாம் எனவும் கருத்து, பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் தமிழகம் வந்த 3,223 பயணிகள் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார். சீனாவில் இருந்து தமிழகத்திற்கு வந்தவர்களில் சென்னையில் 10 பேர், திருச்சி, ராமநாதபுரத்தில் தலா ஒருவர் என மொத்தம் 12 பேர் மருத்துவ கண்காணிப்பில் தற்போது வைக்கப்பட்டனர். இந்த கொரோனா வைரஸ் குறித்து தமிழக சுகாதார அதிகாரிகள், மேனிலை … Read more

சபரிமலை, மசூதிகளில் பெண்களை அணுமதிப்பது தொடர்பான சீராய்வு மணுக்கள் மீது இன்று உச்ச நீதிமன்றம் விசாரணை…

சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்கள் அனுமதிப்பது, மசூதிகளில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான சீராய்வு மீதான விசாரணை இன்று தொடங்குகிறது. 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமைவு இன்று விசாரிக்கிறது. சபரிமலை ஐய்யப்பன் கோவிலுக்கு, அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பான வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்கள் மீதான விசாரணையை  உச்ச நீதிமன்றம்  இன்று  துவக்குகிறது. கேரளா மாநிலம்  சபரிமலையில் உள்ள  ஐய்யப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும்படி, உச்ச நீதிமன்றம் கடந்தாண்டு உத்தரவிட்டது. … Read more

வரலாற்றில் இன்று(03.1.2020)… தமிழக முன்னால் முதல்வர் அறிஞர் அண்ணா மறைந்த தினம் இன்று…

இந்தியா குடியரசான பிறகு 1952 முதல் நடந்த தேர்தலில் ஆட்சி அமைத்த இந்திய தேசிய  காங்கிரசல்லாத முதலாவது திராவிடக்கட்சித் தலைவர் என்ற பெருமையுடன், அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தவர் என்ற பெருமையும் கொண்டவர் அறிஞர் அண்ணா ஆவர். தமிழகத்தில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்ட அறிஞர் அண்ணா மறைந்த தினம் வரலாற்றில் இன்று. பிறப்பு:- அறிஞர் அண்ணா  காஞ்சிபுரம் மாவட்டத்தில்  செப்டம்பர் மாதம் 15ம் நாள், 1909ம் ஆண்டு,  நடராசன்  முதலியார்  மற்றும் பங்காரு அம்மாளுக்கும்  மகனாகப் பிறந்தார். இவர் தந்தை ஒரு … Read more

நாட்டின் அதிவேக ரயிலில் புதிய வசதி… அறிவித்தது தென்னக ரயில்வே..

தேஜஸ் ரயிலில் புதிய வசதி. தெற்கு ரயில்வே புதிய அறிவிப்பு. தேஜஸ் எக்ஸ்பிரஸ் என்ற அதிநவீன புதிய ரயிலைய் இந்திய இரயில்வே  அறிமுகம் செய்தது., இந்த ரயிலில் பெட்டி முழுவதும் குளிரூட்டப்பட்ட இந்தியாவின் அதிவேக ரயில் தான் இந்த தேஜஸ் ரயில், இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 130 முதல் 200 கிமீ ஆகும். இந்தியாவில் முதல் தேஜஸ் விரைவு ரயில், 24 மே 2017 அன்று  மும்பை சத்திரபதி சிவாசி ரயில் நிலையத்திலிருந்து, 551.7 கிமீ … Read more

மெட்ரோ ரயில் நிலையங்களில் பாரம்பரிய கலை நகழ்ச்சிகள்… மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவிப்பு… நிகழ்ச்சிகளின் பட்டியல் உள்ளே..

சென்னையில், மெட்ரோ ரயில்நிலையங்கள் மற்றும் மெட்ரோ ரயிலில்  நான்கு நாட்களிக்கு  இசை நிகழ்ச்சி நடத்த   மெட்ரோ ரயில் நிறுவனம் தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் தமிழ்கலாச்சாரம் குறித்த கலை நிகழ்ச்சிகள் மெட்ரோ ரயில் நிலையங்களில் நடைபெறும் என அறிவிப்பு. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தமிழ் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை கொண்டாடுவதன் ஒரு பகுதியாக சென்னை முழுவதும் உள்ள பல இசைக் கலைஞர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து சென்னை மக்களுக்கு தமிழ் கலாச்சாரத்தின் இசை … Read more

குடியரசு தினத்தன்று குண்டு வைக்க சதி.. வில்சன் கொலை குற்றவாளிகள் திட்டம் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்..

ஓரே நேரத்தில் ஆறு இடங்களில் குண்டு வெடிக்க வைக்க சதி. கைதான தீவிரவாதிகள் விசாரணையில் தகவல். கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனை சாவடியில் கடந்த 8-ந் தேதி புதன் கிழமை  இரவு காவல்துறை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் (வயது 57) கொடூரமான முறையில் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த கொலையில் கைது செய்யப்பட்ட அப்துல் சமீம், தவுபிக் என்ற இரு தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். பின் இருவரும் பாளையங்கோட்டை  சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில் காவல்துறை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கொலைக்கு காரணமான … Read more