சூர்யாவின் காப்பான் திரைப்படம் வெளியானதை முன்னிட்டு, சூர்யா ரசிகர்களின் அட்டகாசமான செயல்!

Surya's Kapoor Movie Released

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் தற்போது கே.வி.ஆனந்த் இயக்கத்தில், நடித்துள்ள திரைப்படம் காப்பான். ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், இப்படம் பல தடைகளை தாண்டி வெளியாகியுள்ளது. இந்நிலையில், விஜய், அஜித், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களின் திரைப்படம் வெளியாகும் போது, ரசிகர்கள் பேனர் அடித்து மிக பிரமாண்டமாக கொண்டாடுவது உண்டு. ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன்பதாக பேனர் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி உயிரிழந்த சுபஸ்ரீ விவகாரத்தால், அனைத்து நடிகர்களும் தங்களது ரசிகர்களிடம் பேனர் வைக்க வேண்டாம் என வேண்டுகோள் விடுத்தனர். இந்நிலையில், நடிகர் சூர்யாவின் காப்பான் திரைப்படம் வெளியானதையடுத்து, சூர்யா ரசிகர்கள் வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் வாங்கி கொடுத்து கொண்டாடியுள்ளனர். இவர்களது இந்த செயலை பலரும் பாராட்டியுள்ளனர்.

Actor Surya is a popular actor in Tamil cinema. He is currently working on KV Anand's upcoming film Capacan. Amidst much anticipation by fans, the film has crossed many hurdles. In this case, when the movie stars Vijay, Ajith and Surya, the fans will have a huge banner. However, due to the death of Subasree, which had just collapsed just days before the banner collapsed, all actors appealed to their fans not to put the banner on. Soon after the release of actor Suriya's Kapoor film, Suriya fans have celebrated giving away helmets to motorists. Their work has been praised by many.