45 ஆண்டுகால திரைப்பயணம்.! நீங்கள் இல்லாமல் நான் இல்லை.! சூப்பர் ஸ்டாரின் நெகிழ்ச்சி பதிவு.!

45 ஆண்டுகால திரைப்பயணம்.! நீங்கள் இல்லாமல் நான் இல்லை.! சூப்பர் ஸ்டாரின் நெகிழ்ச்சி பதிவு.!

45 ஆண்டுகால திரைப்பயணத்திற்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது டிவிட்டர் பக்கத்தில் டிவீட் செய்துள்ளார்.

தமிழ் திரையுலகில் நடிகராக அறிமுகமாகி 45 வருடங்களை வெற்றிகரமாக அதுவும் திரையுலகின் முடிசூடா மன்னனாக திகழ்ந்து வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வாழ்த்தும் விதமாக ரசிகர்கள் அவருக்காக பொதுவான புகைப்படத்தை (Common DP) வெளியிட்டுள்ளனர். அதனை பலரும் வெளியிட்டு தங்கள் வாழ்த்து பதிவுகளையும் பதிவிட்டு வருகின்றனர்.

அதற்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், "என்னுடைய திரையுலக பயணத்தின் நாற்பத்தைந்து ஆண்டுகள் நிறைவு பெறும் இந்நாளில், என்னை வாழ்த்திய நல் இதயங்களுக்கும், என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிக பெருமக்களுக்கும், என்னுடைய இதயம் கனிந்த நன்றி. " எனவும், நீங்கள் இல்லாமல் நான் இல்லை என்ற ஹேஸ்டேக் ஒன்றையும் சேர்த்து பதிவிட்டுள்ளார்.

Latest Posts

தூக்கம்மில்லா இரவுகளை விட்டுக்கொடுக்கும் தல தோனி - கம்பீர் உருக்கம்..!
கணவரின் அருமைகளை சொல்லும் அனிதா - எரிச்சல் பட்டு குறுக்கிடும் சம்யுக்தா!
ஒரே விமானத்தில் பயணிக்க உள்ள முதல்வர் பழனிசாமி மற்றும் மு.க.ஸ்டாலின்!
மீண்டும் ஒரு 'டிசம்பர்-15' அபாயமோ என அஞ்சும் அளவுக்கு மிதக்கும் சென்னை - மு.க.ஸ்டாலின் அறிக்கை
சிக்கனம் வீட்டை காக்கும், சேமிப்பு நாட்டை காக்கும் - துணை முதல்வர்!
7.5% இடஒதுக்கீடு விவகாரத்தில் ஆளுநர் மனசாட்சிப்படி முடிவு எடுக்க வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரை கிளை
புதிய கெட்டப்பில் #STR..... தெறிக்கவிடும் புகைப்படங்கள்..!
கால்கள் நடுங்கிய பாகிஸ்தான் ராணுவ தளபதி.. நாடாளுமன்றத்தில் போட்டு உடைத்த எதிர்க்கட்சி எம்.பி.!
'தமிழகம் மீட்போம்' ! நவம்பர் 1 முதல் சிறப்பு பொதுக்கூட்டங்கள் - திமுக அறிவிப்பு
ரஜினியின் அவசர அறிக்கை ! அரசியலுக்கு வரப்போவதில்லை என மறைமுகமாக கூறுகிறாரா?