அட இப்படி ஒரு ஆசையா? சாய்ப்பல்லவியுடன் திருமணம்! பூஜா ஹெக்டேயுடன் டேட்டிங்!

நடிகை சாய்ப்பல்லாவி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பிரேமம் படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். சமீபத்தில் இவர் நடிகர் தனுசுடன் இணைந்து நடித்த மாரி-2 திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், பிரபல தெலுங்கு நடிகரான வருண் தேஜ், சாய் பல்லவியுடன் இணைந்து ஃபிடா என்ற படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவரிடம் சாய் பல்லவி, பூஜா ஹெக்டே, ராஷி கன்னா ஆகியோரின் பெயரைக் குறிப்பிட்டு, இவர்களில் யாரை திருமணமும், யாருடன் டேட்டிங்கும், யாரை கொலை செய்யவும் விரும்புகிறீர்கள் என்று கேள்வி கேட்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த வருண் தேஜ், சாய் பல்லவியை திருமணம் செய்ய விரும்புவதாகவும், பூஜா ஹெக்டேவுடன் டேட்டிங் செல்ல விரும்புவதாகவும், ராஷி கன்னாவை கொலை செய்ய விரும்புவதாகவும் கூறியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.