ஸ்டெர்லைட் வழக்கு.! மீண்டும் டிசம்பர் 16-ம் தேதி விசாரணை.!

  • உயர்நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கேட்டு வேதாந்தா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.
  • ஆகஸ்ட் 30 தேதிக்கு பிறகு ஸ்டெர்லைட் வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் டிசம்பர்16 முதல் 20 வரை விசாரணை நடைபெற உள்ளது.

கடந்த ஆண்டு  தூத்துக்குடியில் உள்ள வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் தாமிர ஆலைக்கு எதிராக  மக்கள் போராட்டங்கள் நடத்தினர். இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது  மே 22-ம் தேதி போலீசார் நடத்திய தூப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். அந்த ஆலை செயல்படுவதற்கு எதிராக மக்கள் நடத்திய  கடுமையான போராட்டத்தின் விளைவாகக் தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசாணை வெளியிட்டது.

பின்னர் உச்சநீதிமன்றத்தில் ஸ்டெர்லைட்  ஆலையை திறக்க அனுமதி கேட்டு வேதாந்தா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.இந்த வழக்கை விசாரித்தது உச்சநீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை விதித்தது.மேலும் உயர்நீதிமன்றத்தை நாட உச்சநீதிமன்றம் வலியுறுத்தியது.

இந்நிலையில் ஆகஸ்ட் 30 தேதிக்கு பிறகு ஸ்டெர்லைட் ஆலையை மூடியதை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் டிசம்பர்16 முதல் 20 வரை விசாரணை நடைபெற உள்ளது. இந்த வழக்கை நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் அமர்வு முன்பு விசாரணை செய்யும் என  உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

 

author avatar
murugan