ஒரு சொட்டு மழைநீர் கூட வீணாகாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது-முதலமைச்சர் பழனிசாமி

திருவள்ளூர் கூரம்பாக்கத்தில் குடிமராமத்து பணிகளை தொடங்கி வைத்து முதலமைச்சர்

By venu | Published: Aug 08, 2019 06:04 AM

திருவள்ளூர் கூரம்பாக்கத்தில் குடிமராமத்து பணிகளை தொடங்கி வைத்து முதலமைச்சர் பழனிசாமி பேசினார்.அப்பொழுது அவர் பேசுகையில், மழைநீர் சேகரிப்பு பணிகளில் தமிழக அரசு துரிதமாக செயல்படுகிறது.நீர்நிலைகளை பாதுகாக்கும் பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. ஏரி, ஆறுகளை மீட்டெடுக்கும் பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது .சென்னையில் 53 ஏரிகளை சீரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது, நீர்நிலை இயக்கத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும். காவிரி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஒரு சொட்டு மழைநீர் கூட வீணாகாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 1038 ஏரிகளை சீரமைக்க நடவடிக்கை, நீர்நிலை இயக்கத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும். 40 ஆண்டுகள் இல்லாத வறட்சி தமிழகத்தில் நிலவுகிறது என்று முதலமைச்சர் பேசினார்.
Step2: Place in ads Display sections

unicc