பாடத்திட்டங்கள் 10% குறைக்கப்பட்டுள்ளது – அமைச்சர் செங்கோட்டையன்!

மாணவர்களுக்கு பாடத்திட்டம் 10% குறைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

தமிழகம் முழுவதிலும் கொரானா வைரஸின் தீவிரம் அதிகரித்துக்கொண்டே செல்வதால், கடந்த சில மாதங்களாக போக்குவரத்து, கல்வி துறை, தொழில்துறை என அனைத்துமே முடக்கப்பட்ட நிலையில் உள்ளது. இந்நிலையில் அரசு தற்போது மக்களுக்காக சில தளர்வுகளை அறிவித்து வருகிறது. அதில் ஒன்றாக ஆன்லைன் மூலமாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தாலும் விரைவில் பள்ளிகள் திறக்க வாய்ப்பு உள்ளது என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் பல பள்ளி கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பதிவுகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கொரோனா காலகட்டத்தில் ஏற்கனவே பாதி கல்வி ஆண்டு முடிவடைந்து உள்ளதால் மாணவர்கள் முழுமையாக புத்தகத்தை படிக்க முடியாததாலும்,பாடத்திட்டங்கள் குறைக்கும் பணி தற்போது நடந்து வந்தது.

இந்நிலையில் ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்த அமைச்சர் செங்கோட்டையன், நீட் தேர்வில் மாநில பாடத்திட்டத்தில் இருந்து 90 சதவீத கேள்விகள் கேட்கப்பட்டதாகவும் சனிக்கிழமைகளில் கல்வி தொலைக்காட்சியில் 6 மணி நேரம் மாணவர்களின் சந்தேகங்களை தீர்க்கப்படும் எனவும் கூறியுள்ளார். மேலும் குழு தந்த அறிக்கை அடிப்படையில் மாணவர்களுக்கான பாட திட்டங்கள் 40 சதவீதம் குறைக்கப்பட்டு உள்ளதாகவும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் கூறியுள்ளார்.

author avatar
Rebekal