#Breaking:இந்தியர்களை மீட்க இன்று மதியம் சீனாவிற்கு இந்திய விமானம் பயணம் .!

  • சீனாவில் இருக்கும் இந்தியர்களை மீட்க மதியம் 12.30 மணிக்கு இந்தியாவில் தனி விமானம் புறப்படுகிறது.
  • இந்த விமானத்தில் வுஹான் நகரில் உள்ள இந்தியர்களை மீட்க ஏர் இந்தியாவின் ஜம்போ பி747 என்ற ஒரு தனி விமானம் புறப்படுகிறது .

சீனாவில் இருக்கும் இந்தியர்களை மீட்க மதியம் 12.30 மணிக்கு இந்தியாவில் தனி விமானம் புறப்படுகிறது. இந்த விமானத்தில் 423 பேர் பயணம் செய்யக்கூடிய ஏர் இந்தியாவின் ஜம்போ பி747  என்ற ஒரு தனி விமானம் புறப்படுகிறது . இந்த விமானம்  டெல்லி விமான நிலையத்தில் இருந்து சீனாவிற்கு செல்ல உள்ளது.

ஏற்கனவே சீனாவில் இருந்த  தங்கள் நாட்டின் மக்களை அமெரிக்கா ,பிரான்ஸ் போன்ற நாடுகள் மீட்ட நிலையில் தற்போது இந்தியா சீனாவில் உள்ள வுஹான் நகரில் இருக்கும் இந்தியர்களை மீட்க இன்று மதியம் 12.30 மணிக்கு டெல்லியில் இருந்து தனி விமானம் புறப்படுகிறது.

வுஹான் நகரில் மருத்துவ படிப்பு  மற்றும் பல்வேறு படிப்புகள் படிக்க இந்திய மாணவர்கள் பலர் சீனாவில் உள்ளனர்.மாணவர்கள் மட்டுமல்லாமல் பல இந்தியர்கள் வேலையும் செய்து வருகின்றனர்.இந்நிலையில் அங்கு உள்ள இந்தியர்களை நாடு திரும்ப ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என மாணவர்களின் பெற்றோர்களை  கோரிக்கை வைத்த நிலையில் சீனாவில் உள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு தனி விமானத்தை அனுப்ப உள்ளது.

சீனாவின் வுஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் இறுதியில் கொரோனா வைரஸ்  கண்டுபிடிக்கப்பட்டது.தற்போது இந்த கொரோனா வைரஸ் சீனாவில் பல மாகாணங்களில் பரவி மக்களை அச்சுறுத்தி வருகிறது.

இந்த பாதிப்பால் தினமும் பலியானோரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது. இன்று காலை வரை கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 213 ஆக உயர்ந்துள்ளது. இந்த வைரஸால் 1,900-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டதாக சீன அரசு கூறியுள்ளது.நேற்று கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 170 ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 

author avatar
murugan