அட சோயாபீன்ஸில் இவ்வளவு மருத்துவ குணங்கள் உள்ளதா?

சோயாபீன்ஸில் உள்ள மருத்துவ குணங்கள். 

சோயாபீன்ஸில் நமது உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கக்கூடிய பல வகையான சத்துக்கள் உள்ளது. சோயாபீன்ஸில் புரத சத்து அதிகமாக உள்ளது. இதனை இறைச்சிக்கு பதிலாக கூட எடுத்துக் கொள்ளலாம். இதில் புரதங்கள், ஒமேகா 3, கொழுப்பு அமிலங்கள்போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகமாக உள்ளது.

இதயம்

சோயாபீன்ஸை நாம் நமது உணவில் அதிகமாக சேர்த்து வருவதால், நமது உடலில் உள்ள கொழுப்பு சத்துக்களை கரைய பண்ணி, இதயம் சம்பந்தமான நோய்கள் வராமல் நம்மை பாதுகாக்கிறது.

புற்றுநோய்

சோயாபீன்ஸில் ஐசோபிளவோன் அதிகமாக உள்ளது. சோயாபீன் மற்றும் அதன் தயாரிப்புகள் புற்றுநோய்க்கான தடுப்பிற்கு மிகவும் உதவுகிறது. இதனால், இதனை நாம் உண்ணும் போது புற்று நோய் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

சர்க்கரை நோய்

சோயாபீன்ஸை நாம் அதிக அளவில் எடுத்துக் கொள்ளும் போது, சர்க்கரை நோய் பிரச்னையில் இருந்து நாம் விடுதலை பெறலாம். இது சர்க்கரை நோய் பிரச்சனையில் இருந்து விடுதலையளிப்பதோடு, நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க செய்கிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.