காங்கிரஸ் நிர்வாகிகளுடன் சோனியா காந்தி ஆலோசனை

டெல்லியில் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் சோனியா காந்தி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர்களுக்கான கூட்டம் சோனியா காந்தி தலைமையில் கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் பங்கேற்க சட்டப்பேரவை கட்சி தலைவர்கள், பொதுச்செயலாளர்கள் மற்றும் மாநிலப் பொறுப்பாளர்கள் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று டெல்லியில் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் சோனியா காந்தி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.இந்த கூட்டத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் குலாம் நபி ஆசாத், கே.சி.வேணுகோபால், ஏ.கே.அந்தோனி, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.