சிம்ரன் – த்ரிஷா கூட்டணி! அடடா, இதுதான் படத்தின் தலைப்பா?

நடிகை சிம்ரன் மற்றும் த்ரிஷா இருவரும் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகைகள். இவர்களது நடிப்பில் உருவாகியுள்ள படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இவர்கள் இருவரும், இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய பேட்ட படத்தில் நடித்துள்ளனர்.

இந்நிலையில், தற்போது சிம்ரன் மற்றும் த்ரிஷா இருவரும் இணைந்து மீண்டும் ஒரு புதிய படத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தினை இயக்குனர் ராதாகிருஷ்ணன் இயக்கி வருகிறார். இப்படம், அதிரடி ஆக்சன் கதைக்களத்தில் உருவாகி வருகிற நிலையில், இந்த படத்திற்கு ‘சுகர்’ என பெயரிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.