பேசிக்கொண்டிருந்த கமல் மீது செருப்பு வீச்சு !

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து அவன் பெயர் நாதுராம் கோட்ஸே என்று கமல் அண்மையில் அரவக்குறிச்சி தொகுதியில் பேசும் பொது தெரிவித்தார் .இது பெரும் சர்ச்சையை கிளப்பியது .

ஆதரவும் எதிர்ப்பும் :

இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியது தமிழக காங்கிரஸ் தலைவர் கே.ஸ்.அழகிரி மற்றும் திராவிட கழக தலைவர் கீ.வீரமணி ஆகியோர் ஆதரவும் தெரிவித்தனர். அதே சமயம் பாஜக தலைவர்கள்  தமிழிசை சவுந்தரராஜன்,ஹெச்.ராஜா ,சுப்ரமணிய சுவாமி ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்து தங்கள் கண்டனத்தை தெரிவித்தனர்.இதற்க்கு பிரதமர் மோடியும் எந்த ஒரு ஹிந்துவும் தீவிரவாதியாக இருக்க முடியாது அப்படி இருந்தால் அந்த நபர் ஹிந்துவாக இருக்க முடியாது என்று தனது கண்டனத்தை ட்விட்டரில் பதிவு செய்தார்.

பிரச்சாரம் ரத்து:

இந்த சர்ச்சைக்குரிய கருத்துக்கு பல எதிரிப்பு வந்த நிலையில் கமலஹாஸனின் அரவக்குறிச்சி பிரச்சாரம் இரண்டு நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. அதன் பின் மீண்டும் நேற்று திருப்பரங்குன்றம் தோப்பூரில்  தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய கமல் ,நான் கூறியது சரித்திர உண்மை, என் கருத்தை திரும்ப பெறமாட்டேன் என்று திட்டவட்டமாக  தெரிவித்தார்.அப்பொழுது பேசிக்கொண்டிருந்த கமல் செருப்பு வீசப்பட்டது .இதில் பாஜக மற்றும் அனுமன் சேனா அமைப்பைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது .

ஆனால் இன்று  கமலின் பிரச்சாரத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.ஆனால் இந்த வழக்கை உயர் நீதிமன்ற மதுரை கிளை விசாரிக்க மறுப்பு தெரிவித்துவிட்டது குறிப்பிடத்தக்கது .

 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment