கமல் பேசியதற்கான ஆதாரங்களை தாக்கல் செய்ய டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவு

இந்து மதத்திற்கு எதிராக கமல் பேசியதற்கான ஆதாரங்களை தாக்கல் செய்ய டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது .

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் போட்டியிடும் தனது கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது, ‘இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து எனவும், அவர் நாதுராம் கோட்சே’ எனவும் குறிப்பிட்டார். இதற்கு  கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது.மேலும் கமல்ஹாசன் மீது வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

கமல் மீது டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.மேலும்  கமல்ஹாசன் பரப்புரை செய்ய தடைவிதிக்க கோரி  உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது.இதை விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை மறுப்பு தெரிவித்துவிட்டது.

இந்தநிலையில் இந்து சேனா அமைப்பு சார்பாக டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் கமல் பேசியதற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த டெல்லி பாட்டியாலா நீதிமன்றம், கமல் பேசியதற்கான ஆதாரங்களை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது.பின்னர் வழக்கு விசாரணை ஆகஸ்ட் 2-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

 

Leave a Comment