மீன்வளத்துறையை மேம்படுத்த ரூ.20 ஆயிரம் கோடி ஒதுக்கீடு – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

மீன்வளத்துறையை மேம்படுத்த ரூ.20 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு. 

பிரதமர் மோடி அறிவித்த, ரூ.20 லட்சம் கோடி நாட்டின் பொருளாதார மேம்பாட்டு சிறப்பு திட்டத்திற்கான முதல் கட்ட  அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த இரு தினங்களாக வெளியிட்டு வருகிறார். தற்போது மூன்றாம் கட்ட அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். 

இந்த அறிவிப்பில், மீன்வளத்துறையை மேம்படுத்துவதற்காக பிரதமரின் மீன்வளத் திட்டத்தில் ரூ.20 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில், கடல், உள்நாட்டு மீன்பிடிப்பு, பண்ணை மீன் வளர்ப்பை ஊக்குவிக்க ரூ.11 ஆயிரம் கோடியும், மீன்பிடி உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக ரூ.9,000 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  மேலும், 5 ஆண்டுகளில் கூடுதலாக 70 லட்சம் டன் மீன் உற்பத்திக்கு வழிவகை செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார். 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.