குறு உணவு நிறுவனங்களுக்கு ரூ.10,000 கோடி ஒதுக்கீடு – நிர்மலா சீதாராமன்!

பிரதமர் மோடி அறிவித்த ரூ.20 லட்சம் கோடி சிறப்பு திட்டத்திற்கான அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த இரு தினங்களாக வெளியிட்டு வருகிறார். முதல்கட்ட அறிவிப்பில், சிறு, குறு நடுத்தர தொழில்களை மேம்படுத்துவற்கான திட்டங்களை அறிவித்திருந்தார்.

இதையடுத்து நேற்று 2 ம் கட்ட அறிவிப்பில், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், சிறு வியாபாரிகள், சிறு விவசாயிகள், நடைபாதை வியாபாரிகள் ஆகியோருக்கான 9 முக்கிய திட்டங்கள் வெளியிட்டார். தற்போது, சுயசார்பு திட்டத்தில் 3ம் கட்ட அறிவிப்புகளை நிதியமைச்சர் வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், இந்தியாவில் குறு நிறுவனங்களை தொடங்குவதற்கு மொத்தமாக ரூ.10ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்றைய செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.