20 மில்லியன் பார்வையாளர்களை தாண்டி இன்னும் ஆசிய அளவில் ட்ரெண்டிங் நெ.1! அசத்தும் ரௌடி பேபி!!!

தனுஷ் நடிப்பில் டிசம்பர் 21இல் வெளியாகி இருந்த திரைப்படம் மாரி 2. இந்த படத்தை பாலாஜி மோகன் இயக்கி இருந்தார். இப்படத்தில் சாய் பல்லவி  ஹீரோயினாக நடித்திருந்தார். மேலும் பலர் நடித்திருந்தனர். இப்படத்தை தனுஷ் தயாரித்திருந்தார்.

இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருந்தார். இந்த படத்தில் அனைத்து பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக இப்படத்திலிருந்து ரவுடி பேபி பாடல் ரசிகர்களின் ஏகபோக வரவேற்பை பெற்றது.

இதன் வீடியோ பாடலில், தனுஷ், சாய் பல்லவி போட்ட ஆட்டமும் யூடியூபில் பல லட்ச ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த வீடியோ பாடல் 20 மில்லியன் பார்வையாளர்களை கடந்தது. இதில் இவர்களது நடனத்தை யு-டியூபே பாராட்டியது. இந்த பாடல் இந்தியாவை தாண்டி ஆசிய அளவில் முதலிட்த்தில் இருந்தது.

DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment