#BREAKING : இந்திய அணிக்கு பின்னடைவு-நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் இருந்து ரோகித் சர்மா விலகல்

நியூசிலாந்துக்கு எதிரான 5வது டி20 போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக ஒரு நாள் மற்றும் டெஸ்ட் தொடர்களிலிருந்து ரோகித் சர்மா விலகியுள்ளார். 

இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்டில் விளையாடுவதற்காக சென்று உள்ளது.அதன்படி நேற்று இந்தியா ,நியூஸிலாந்து இடையில் 5-வது  மற்றும் கடைசி டி20 போட்டி பே ஓவல் மைதானத்தில் நடைபெற்றது .இந்த போட்டியில் கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்ட நிலையில் ரோகித் சர்மா அணியை கேப்டனாக வழி நடத்தினார்.

இப்போட்டியில் முதலில்  களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் குவித்தனர். நியூஸிலாந்து அணியில் ஸ்காட்  2 விக்கெட்டை பறித்தார்.164 ரன்கள் இலங்குடன் நியூஸிலாந்து அணி விளையாடி வருகிறது.

இப்போட்டியில் இந்திய கேப்டன் ரோகித் ஷர்மா மூன்றாவது விக்கெட்டுக்கு களமிறங்கினர் . சிறப்பாக விளையாடிய ரோகித் ஷர்மா அரைசதம் அடித்து 60 ரன்கள் எடுத்த போது இடது காலின் பின் பகுதியில் தசையில் பிடிப்பு ஏற்பட்டது. பின்னர் அவருக்கு முதலுதவி சிகிக்சை கொடுக்கப்பட்டது. இதையெடுத்து ரோஹித் ஷர்மா மூன்று பந்துகள் பிடித்த நிலையில் ரிட்டையர்டு ஹர்ட் முறையில் வெளியேறினார்.இதன் பின்னர் நியூசிலாந்து அணி பேட்டிங் செய்தபோது  ராகுல் கேப்டனாக செயல்பட்டார்.எனினும் இந்திய அணி இந்த போட்டியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.நியூசிலாந்து அணியின் சொந்த மண்ணில் தொடரை 5-0 என்ற கணக்கில் கைப்பற்றி சாதனை படைத்தது.டி20 தொடர் முடிந்த நிலையில் வருகின்ற 5 ஆம் தேதி முதல் ஒரு நாள் போட்டி இரு அணிகளுக்கு இடையே நடைபெறுகிறது.ஒருநாள் தொடரை தொடர்ந்து 2 போட்டிகள்கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது.

இந்நிலையில் நியூசிலாந்துக்கு எதிரான 5வது டி20 போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக ஒரு நாள் மற்றும் டெஸ்ட் தொடர்களிலிருந்து ரோகித் சர்மா விலகியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.