சட்ட நடவடிக்கை முடிந்த பிறகு ராமர்கோவில் தொடர்பான அவசர சட்டம் பற்றி பரிசீலனை…! பிரதமர் நரேந்திர மோடி

2019 நாடாளுமன்ற தேர்தல், மக்களுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையிலான மோதலாக இருக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனியார் செய்தி நிறுவனத்திற்கு பிரதமர் மோடி கூறுகையில், ராமர் கோவில் விவகாரத்தில் நீதிமன்ற நடவடிக்கைகளை காங்கிரஸ் தாமதப்படுத்தியது.சட்ட நடவடிக்கை முடிந்த பிறகு ராமர்கோவில் தொடர்பான அவசர சட்டம் பற்றி பரிசீலனை செய்யப்படும்.தமது ராஜினாமா குறித்து 6 மாதங்களுக்கு முன்பே உர்ஜித் பட்டேல் தெரிவித்தார். ஆர்.பி.ஐ. கவர்னராக சிறப்பாக பணியாற்றி இருக்கிறார்.வரும் நாடாளுமன்ற தேர்தலில் சாமானியர் மற்றும் மெகா கூட்டணி இடையே தான் போட்டி. நான் சாமானியரின் பிரதிபலிப்பு தான்.

உச்சநீதிமன்றம் தீர்ப்பின் படியே முத்தலாக் அவசர சட்டம் இயற்றப்பட்டது. கருப்புப் பணத்தை ஒழிப்பதற்காகவே பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது .ஒரு சிலர் மட்டுமே கருப்பு பணத்தை தாமாக முன்வந்து திரும்ப செலுத்தினர் .நாட்டை 4 தலைமுறைகளாக ஆட்சி செய்து வந்தவர்கள் பல நிதி மோசடிகளில் ஈடுபட்டுள்ளனர் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

Leave a Comment