இன்றைய (08.11.2019) நாள் எப்படி இருக்கு!? ராசி பலன்கள் இதோ…

மேஷம் : இன்றைய நாள் உங்கள் சாதகமான நாளாக இருக்காது. எதோ இல்லாதது போன்ற உணர்வு ஊன்களிடத்தில் இருக்கும். இன்று உங்களுக்கு பொறுமை மிக அவசியம்.
ரிஷபம் : வாய்ப்ப்புகள் அதிகாமாக கிடைக்கும் நாள். தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். முக்கிய முடிவுகளை இன்றே எடுத்துவிடுங்கள். இன்று நீங்கள் கொண்டாடும் சூழல் உண்டாகும்.
மிதுனம் : உங்களது கடின உழைபிற்கான பலன் இன்று கிடைக்கும். உங்கள் வாழ்வில் முன்னேற்றம்  இருக்கும். நல்ல பலனுள்ள நாள்.
கடகம் : நீங்கள் செய்யக்கூடிய செயல்களில் மிகவும் ஆழமாக செயல்படாமல் யதார்த்தமாக செயல்படுங்கள். புதிய இடங்களுக்கு செல்லுங்கள் மனம் அமைதியாக இருக்கும். இன்று உங்களுக்கு அமைதியான அணுகுமுறை முக்கிய தேவை.
சிம்மம் :பிறருக்கு உதவி செய்யுங்கள். முக்கியமாக இயலாதவர்களுக்கு உதவி செய்யுங்கள் மனம் அமையதியாக இருக்கும். முக்கியமான முடிவுகளை இன்று எடுக்காமல் இருப்பது நல்லது.
கன்னி : உங்கள் முயற்சி இன்று வெற்றியில் முடியும். அந்த வெற்றிகள் உங்களுக்கு நல்ல பலன்களை தரும். இன்று உங்கள் மனம் சமநிலையை நாடும். தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள்.
துலாம் : இன்று நீங்கள் புத்துணர்ச்சியுடன் இருப்பீர்கள். இன்றைய நாள் உங்களுடையது, அதனை பயனுள்ள வகையில் பயன்படுத்தி கொள்ளுங்கள். அனைத்தும் உங்களுக்கு ஏற்றார்போல நடைபெறும்.
விருச்சிகம் : இன்று நீங்கள் செய்யும் செயலுக்கு அளவான பலன்களே கிட்டும். யதார்த்தமான அணுகுமுறைகளை மேற்கொள்ளுங்கள். உங்களின் விடாமுயற்சி நல்ல பலனை தரும்.
தனுசு : வாழ்வில் முக்கியமான முடிவுகளை எடுக்கும் நாள் இன்று இல்லை. கவனமாக செயல்படுங்கள். இன்று உணர்ச்சிவசப்பட வேண்டிய சூழல் வரும் அதனை கட்டுப்படுத்தி இருங்கள்.
மகரம் : இன்று நீங்கள் அமைதியான அணுகுமுறைகளை செயல்படுத்தினால் நல்ல முடிவுகள் கிடைக்கும். உங்கள் முக்கியமான  வேலைகளை செய்துவிடுங்கள் இன்றைய நாள் உங்களுடையது.
கும்பம் :  சீரான நாள் இன்று. மகிழ்ச்சியும் திருப்தியும் ஒரு சேர காணப்படும் நாள். இன்று நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். இதனை உங்கள் முன்னேற்றத்திற்கு நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
மீனம் : இன்றைய நாள் சுமூகமாக இருக்க நீங்கள் கொஞ்சம் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டிய சூழல் உருவாகும். நம்பிக்கையை இழக்கும் நிலைமை ஏற்படும். எனவே உங்கள் தன்னம்பிக்கையை வளர்த்து கொள்ள வேண்டும்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.