நாட்டின் குரலை அடக்க முயற்சி -ராகுல் காந்தி

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக காங்கிரஸ் கட்சி சார்பாக

By venu | Published: Dec 24, 2019 10:51 AM

  • குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக காங்கிரஸ் கட்சி சார்பாக தர்ணா போராட்டம் நடைபெற்றது. 
  • போராடுபவர்களை சுடுவது, தடியடி நடத்துவதன் மூலம் நாட்டின் குரலை ஒடுக்க முயற்சிக்கிறார்கள் என்று  காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி  தெரிவித்துள்ளார். 
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக டெல்லி ராஜ்காட்டில் காங்கிரஸ் கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர் .இந்த போராட்டத்தில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, மன்மோகன் சிங், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் தர்ணாவில் பங்கேற்றனர். இந்த போராட்டத்தில் காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி பேசுகையில்,  இந்தியாவின் பொருளாதாரத்தை சீர்குலைக்க நமது எதிரிகள் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டனர் .ஆனால் நாட்டின் எதிரிகள் செய்ய முடியாததை தற்போது பிரதமர் மோடி செய்து வருகிறார்.போராடுபவர்களை சுடுவது, தடியடி நடத்துவதன் மூலம் நாட்டின் குரலை ஒடுக்க முயற்சிக்கிறார்கள்.உங்கள் உடைகளை வைத்தே முழு தேசமும் உங்களைப் பற்றி அறிவார்கள்  என்று தெரிவித்துள்ளார்.     
Step2: Place in ads Display sections

unicc