பள்ளி குழந்தைகள் மீது நடத்தப்படும் உளவியல் தாக்குதல் - திருமாவளவன்

பள்ளி குழந்தைகள் மீது நடத்தப்படும் உளவியல் தாக்குதல் - திருமாவளவன்

நடப்பு கல்வியாண்டு முதல் 5-ஆம் மற்றும் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று அறிவித்த நிலையில் இது மாணவர்கள் மீது நடத்தப்படும் உளவியல் தாக்குதல் என்று திருமாவளவன்  கூறியுள்ளார்.  தமிழகத்தில் முதல் முறையாக நடப்பு கல்வியாண்டு முதல் 5-ஆம் மற்றும் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்தது.இதன்படி இந்த ஆண்டு இந்த பொதுத் தேர்வை நடத்த அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது. ஆனால் இந்த அறிவிப்புக்கு பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள், மாணவர்கள் கடும் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் காஞ்சிபுரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,பொதுத்தேர்வு நடத்துவது மோசமான அரசு பயங்கரவாத நடவடிக்கை.இதனை அரசு கைவிட வேண்டும்.பள்ளி குழந்தைகள் மீது நடத்தப்படும் உளவியல் தாக்குதல் ஆகும்.இதனை எந்த வகையிலும் ஞாயப்படுத்த முடியாது.எனவே 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தும் முடிவை ,தமிழக அரசு கைவிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.  ]]>

Latest Posts

தமிழகத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!
பாலியல் குற்றம்-ஈடுபட்டாலே பிறப்புறுப்பு அகற்றம்! நைஜீரியா அதிரடி சட்டம்..
யாஷிகாவின் அட்டகாசமான கவர்ச்சி புகைப்படம்...!
விரைவில் தொடங்கப்படும் நடமாடும் நியாயவிலைக் கடை... தமிழக முதல்வர் தொடங்கிவைக்கிறார்...
அழுத்தத்தில் அதிமுகவா??செப்.,28ல் செயற்குழுக்கூட்டம்!
அடுத்த வாரம் பருவமழை திரும்ப பெய்ய வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்
கிசான் முறைகேடு : பொதுமக்கள் புகார் அளிக்கலாம் - சிபிசிஐடி
#எல்லாம் உயிர்தாங்க-வயிற்றில் இறந்த 4குட்டிகள்..போராடிய தாய்!காப்பாற்றிய கருணை மக்கள்!
#இறுதியாண்டு தேர்வு-பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்!
நவாஸ்க்கு பிடிவாரன்ட்! பாக்.,அரசு தீவிரம்