மீண்டும் சர்சையில் சிக்கிய பிரியங்கா சோப்ரா..!

நடிகை பிரியங்கா சோப்ரா சமீபத்தில் வெளியிட்ட புகைப்படத்தின் மூலம் சர்ச்சையில்

By murugan | Published: Nov 08, 2019 02:44 PM

நடிகை பிரியங்கா சோப்ரா சமீபத்தில் வெளியிட்ட புகைப்படத்தின் மூலம் சர்ச்சையில் சிக்கினார். கடந்த சில நாள்களாக காற்று மாசுவால் டெல்லி தலைநகர் பாதிக்கப்பட்டு உள்ளது.இதை தொடர்ந்து பிரியங்கா சோப்ரா முகத்தை மூடிக்கொண்டு ஒரு  புகைப்படத்தை வெளியிட்டார். அதில் "காற்று மாசு ஏற்பட்டு உள்ளதால் எப்படி வாழ முடியும்.காற்று சுத்திகரிப்பு மற்றும் முகமூடி நமக்கு தேவையாக உள்ளது என கூறியிருந்தார்.மேலும் வீடு இல்லாதவர்களுக்கு பிராத்தனை செய்து கொள்ளுங்கள்" என பதிவிட்டு இருந்தார். இதற்கு புகைபிடிக்கும் உங்கள் வாய்க்கு முகமூடி போட்டது சரிதான் இரட்டை வேஷம் போடவேண்டாம் என கூறினர்.மேலும் முதலில் நீங்கள் புகைபிடிப்பதை விடுங்கள் என பிரியங்கா சோப்ராவை விமர்சனம் செய்தனர்.
இந்நிலையில் தற்போது பிரியங்கா சோப்ரா மீண்டும் ஒரு சர்சையில் சிக்கியுள்ளார்.அவர் வெளியிட்ட ஒரு புகைப்படத்தில் ரூ.500 நோட்டுகளை வரிசைகளை அடுக்கி வைத்து அதன் மத்தியில் ஐஸ்கிரீம் வைத்து சாப்பிடுவது போல புகைப்படம் உள்ளது. சாப்பாட்டுக்கு வலியில்லாமல் இருக்கும் ஏழைகள் உள்ள நாட்டில் ரூ.500 நோட்டுகள்  மத்தியில் ஐஸ்கிரீம் சாப்பிடுவது காந்திஜி புகைப்படத்தை அவமதித்த செயல் என பலர் கருத்து தெரிவித்து உள்ளனர்.
Step2: Place in ads Display sections

unicc