தமிழ் புத்தாண்டுக்கு தமிழில் ட்வீட் செய்து வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி!

இன்று தமிழர்கள் மிக சிறப்பாக கொண்டாடக் கூடிய தமிழ் புத்தாண்டு ஆகும். இந்த நாளை

By leena | Published: Apr 14, 2020 10:07 AM

இன்று தமிழர்கள் மிக சிறப்பாக கொண்டாடக் கூடிய தமிழ் புத்தாண்டு ஆகும். இந்த நாளை நாளை மக்கள் அனைவரும் மிக கோலாகலமாக கொண்டாடுவதுண்டு. அந்த வகையில், தற்போது கொரோனா வைரஸ் காரணமாக மக்கள் வீட்டிற்குள் முடங்கி கிடக்கின்றனர். இந்நிலையில், இந்திய பிரதமர் சித்திரை விழாவை கொண்டாடும் மக்களுக்கு, தனது ட்வீட்டர் பக்கத்தில் தமிழில் ட்வீட் செய்து வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த பதிவில், 'அனைவருக்கும், குறிப்பாக என் தமிழ்ச் சகோதரர் சகோதரிகளுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள். இன்பம் நிறைந்த ஆண்டாக இது அமைந்திடப் பிரார்த்திக்கிறேன்.எதிர்வரும் ஆண்டில் உங்கள் விழைவுகள் யாவும் நிறைவேறிடட்டும்.' என பதிவிட்டுள்ளார்.
Step2: Place in ads Display sections

unicc