சீனாவில் வெளியாகும் பிரபல நடிகையின் திரைப்படம்!

நடிகை சமந்தா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இவர் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், இயக்குனர் நந்தினி ரெட்டி இயக்கத்தில், உருவான ‘ஓ பேபி’ திரைப்படத்தில், முதன்மை கதாபாத்திரத்தில், நடித்துள்ளார். இப்படம் 70 வயது மதிக்கத்தக்க பாட்டி, குடும்பத்தினரின் அன்பு கிடைக்காமல் தனிமையில் வாடுகிறார். இதனையடுத்து, ஒரு நாள் போட்டோ ஸ்டுடியோவுக்கு செல்லும் பாட்டி, கேமரா பிளாஷ் அடித்ததும், மந்திர சக்தி மூலம் 24 வயது பெண்ணாக மாறுகிறாள்.

இப்படம் இந்தியாவில், தெலுங்கு மற்றும் தமிழில் வெளியாகியுள்ளது. மேலும், இப்படம் அமெரிக்காவிலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், சீனாவிலும் இப்படத்தை வெளியிடுவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.