தர்பார் படம் குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரபல நடிகர்! ஆனால் அந்த வதந்தி உண்மையானால் மகிழ்ச்சி தான்!

இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் படம் தர்பார். இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்கிறார். மேலும் இப்படத்தில், நிவேதா தாமஸ், யோகி பாபு மற்றும் பாலிவுட் நடிகர்கள் சிலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில், பிரபல மலையாள வில்லனான செம்பன் வினோத் ஜோஸ் தர்பார் படத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியானது. இதுகுறித்து, செம்பன் வினோத் ஜோஸ் கூறுகையில், தர்பார் படத்தில் நான் நடிப்பதாக கூறியது முற்றிலும் வதந்தி என்றும், ஆனால் இந்த வதந்தி உண்மையானால் மகிழ்ச்சி தான் என்றும் தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment