ரேடான் மாடல் பைக்கில் புதியதாக இரண்டு கலர் அறிமுகம் செய்த டிவிஎஸ் நிறுவனம்

தமிழகத்தில் உள்ள சென்னையை தலைமை இடமாக வைத்து கொண்டு இயங்கி வரும் நிறுவனம் டிவிஎஸ்.நிறுவனத்தின் பைக்குகள் அனைத்தும் வாடிக்கையாளர் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து உள்ளது.

அப்படி வாடிக்கையாளர்கள் மத்தியில் வரவேற்பு பெற்ற பைக் தான் டிவிஎஸ் ரேடான். டிவிஎஸ் ரேடான் மோட்டார் பைக் 109 CC, சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் பொருத்தப் பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 8.2 PHP பவரையும், 8.7 NM டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இதில், 4 ஸ்பீடு கியர் பாக்ஸ் உள்ளது .

இந்த மோட்டார் பைக்கில் இரண்டு வில்களிலும் ட்ரம் பிரேக்குகள் உள்ளது . மேலும் 18 இன்ச் அலாய் வீல்களை அமைக்கப்பட்டுள்ளது.இந்த மாடல் பைக்கில் டியூப்லெஸ் டயர்கள் உள்ளது.

விற்பனையில் சிறந்து விளங்கும் இந்த ரேடான் பைக் 8 மாதங்களுக்கு முன்பு தான் அறிமுகம் ஆனது . அறிமுகம் செய்த போது கருப்பு, வெள்ளை, கோல்டு மற்றும் பர்ப்பிள் ஆகிய 4 கலர்களில் பைக்குகளை வெளியிட்டனர் .

ஆனால் தற்போது டிவிஎஸ் நிறுவனம்  110 சிசி ரேடானில்  2 புதிய கலர்களை அறிமுகம் செய்துள்ளது. டிவிஎஸ் ரேடான் பைக்குகள்  சிகப்பு மற்றும் க்ரே ஆகிய இரு கலர்களில் கிடைக்கும்.

ஆனால் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை. அதே 50,070 ரூபாய் என்ற விலையில் டிவிஎஸ் ரேடான் கிடைக்கும்.தற்போது இந்தியாவில் உள்ள அனைத்து டீலர் ஷிப்களிலும் இந்த புதிய கலர் கொண்ட டிவிஎஸ் ரேடான் பைக்குகள் கிடைக்கும்.

மேலும் டிவிஎஸ் நிறுவனம் 1 லட்சத்திற்கும் மேலான ரேடான் பைக்குகளை விற்பனை செய்துள்ளது.இந்த ரேடான் பைக்  ஒரு லிட்டருக்கு சுமார் 70 கிலோ மீட்டர் மைலேஜை தருகிறது.

author avatar
murugan

Leave a Comment