#BREAKING : நவம்பர் வரை இலவச பொருட்கள் வழங்கப்படும் – பிரதமர் மோடி அறிவிப்பு

நவம்பர் மாதம் வரை இலவசமாக ரேசன் பொருட்கள் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.  கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு  அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, நாடு முழுவதும் ஜூலை 31-ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,பிரதமர் மோடி தற்போது நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார்.அப்பொழுது அவர் பேசுகையில், ஊரடங்கு சமயத்தில் உணவு இல்லாமல் பசியால் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை என்று பேசினார் .மேலும் நவம்பர் மாதம் வரை இலவசமாக ரேசன் பொருட்கள் வழங்கப்படும்.5 கிலோ அரிசி அல்லது கோதுமை, ஒரு கிலோ பருப்பு வழங்கப்படும். இலவச ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டத்திற்காக 90,000 கோடி ரூபாய் செலவிடப்படும் என்று அறிவித்துள்ளார்.