மாமனாருடன் மோதவுள்ளாரா மருமகன்? பொங்கல் ரேஸில் களமிறங்கும் தனுஷின் பட்டாஸ்!?

அசுரன் படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து தனுஷ் தற்போது பேட்ட இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் முதல் ஷெடியூல் முடிவடைந்துள்ளது.
இதனை தொடர்ந்து துரை செந்தில் குமார் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் பட்டாஸ் பட ஷூட்டிங்கில் தனுஷ் கலந்துகொள்ள உள்ளார். இந்த ஷூட்டிங் வரும் நவம்பர் 25வரை நடைபெற உள்ளதாம் அதனை தொடர்ந்து ஒரு மாதத்தில் படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற் உள்ளன.  படத்தினை இந்த வருட முடிவு அல்லது பொங்கலுக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
பொங்கலுக்கு ரஜினியின் தர்பார் படமும், ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது. பொங்கலுக்கு பட ரிலீஸ் உறுதியானால் மாமனாருடன் மோதவுள்ள மருமகன் தனுஷ் படமும் ரிலீசாகுமான என எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.