பிறந்த 4 நாட்களிலே பெற்ற குழந்தையை 5 லட்சத்துக்கு விற்ற பெற்றோர்.! வளைத்து பிடித்த ஊர்மக்கள்.! பின்னர் நடந்தது என்ன.?

Parents who sold their baby within 4 days sold for Rs 5 lakh. Beauties What happened then?

  • புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த ஒரு தம்பதிக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளன.கடந்த 2019-ம் ஆண்டு மற்றொரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தையை ரூ.5 லட்சத்துக்கு பெற்றோர் விற்பனை செய்ததாக கூறப்படுகிறது.
  • இது தொடர்பான புகாரை அடுத்து சைல்டு லைன் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் விசாரணை நடத்த சென்றபோது, அந்த தம்பதியினர் வீட்டை பூட்டி விட்டு தலைமைறைவானது தெரியவந்தது. பின்னர் வந்த அவர்களை ஊர்மக்கள் பிடித்து அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே பெரியகல்லுவயலைச் சேர்ந்த காடப்பன் செல்வி தம்பதியினருக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் இருந்த நிலையில், கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மற்றொரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த நான்காவதாக பிறந்த 9 மாத ஆண் குழந்தையை பிறந்த நான்கு நாட்களிலேயே 5 லட்ச ரூபாய்க்கு பெற்றோர் விற்பனை செய்ததாக, அங்குள்ள ஒருவர் குழந்தைகள் நல அலுவலருக்கு புகார் அளித்துள்ளார். இது தொடர்பான புகாரை அடுத்து சைல்டு லைன் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் விசாரணை நடத்த சம்பவ இடத்திற்கு சென்றபோது, காலப்பனும் அவரது மனைவி செல்வியும் வீட்டை விட்டு ஓட்டம் பிடித்தது தெரியவந்தது. இந்நிலையில், குழந்தை மற்றும் பெற்றோரை ஒப்படைப்பதாக ஊர் மக்கள் தகவல் தெரிவித்ததால் அதிகாரிகள் அங்கிருந்து சென்றனர். பிறகு சில மணி நேரத்திலேயே வீட்டிற்கு வந்த பெற்றோர் மற்றும் குழந்தையை ஊர்மக்கள் சுற்றி வளைத்த பிடித்து அவர்களை குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். பின்னர் அங்கு குழந்தையின் பெற்றோரிடம் குழந்தைகள் நல தலைவர் ஸ்டெல்லா புஷ்பராணி தலைமையில் உறுப்பினர்கள் மற்றும் குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் இளையராஜா ஆகியோர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் குழந்தையின் பெற்றோர்கள் முரண்பாடான பதில்கள் கூறியதால், சந்தோகமடைந்த சைல்டு லைன் அமைப்பினர், காவல் துறையினரிடம் அவர்களை ஒப்படைத்து விசாரணை மேற்கொள்ள அனுப்பி வைத்தனர்.