எச்சரித்த முதல்வர் பழனிசாமி – தேவையில்லாமல் வெளியில் சுற்றினால் 144 தடை கடுமையாக்கப்படும்.!

நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில், மத்திய மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவால், வெளிமாநிலத்தில் இருந்து வந்து தொழில் புரிந்து இருப்பவர்களை தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த தொழிலார்கள் 377 பேர் வேளச்சேரி குருநானக் கல்லுரியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு முதல்வர் பழனிசாமி அத்தியாவசியமான வெட்டி, லுங்கி, டிசர்ட், உணவு போன்றவைகளை வழங்கினார். மேலும் குருமி நாசினி தெளிக்கும் டிரோன் ஒன்றை இயக்கி துவங்கி வைத்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய முதல்வர், மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கவே இந்த ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது என்றும் அத்தியாவசிய தேவையின்றி வெளியே வருபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். மேலும் அரசின் உத்தரவை மீறி மக்கள் வெளியே சுற்றுவது அதிகரித்தால் 144 தடை உத்தரவை கடுமையாக்க நேரிடும் என்றும் எச்சரித்துள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்