ஆன்லைன் நாடகத்தில் வில்லியாக களமிறங்கும் சமந்தா!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் திருமணம் ஆன பிறகும் தற்போதும், முன்னணி நடிகையாக

By manikandan | Published: Nov 30, 2019 07:20 AM

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் திருமணம் ஆன பிறகும் தற்போதும், முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் நடிப்பில் பல திரைப்படங்கள் வெள்ளிவிழா கண்டுள்ளன. தற்போது இவர் ஒரு ஆன்லைன் வெப் சீரிஸில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இந்த வெப் சீரிஸிற்கு பேமிலி மேன் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதன் முதல் பாகம் நல்ல வெற்றியை பெற்றதையடுத்து தற்போது இதன் இரண்டாம் பாகம் தயாராக உள்ளது. இந்த வெப் சீரிஸ் பற்றிய மற்ற அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆன்லைன் வெப்சீரிஸில் ஏற்கனவே காஜல் அகர்வால், தமன்னா உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து தற்போது சமந்தாவும் இந்த பட்டியலில் இணைந்துள்ளார்.
Step2: Place in ads Display sections

unicc