#Breaking : தமிழகத்தில் முதன் முதலாக ஒருவர் பிளாஸ்மா தானம் செய்துள்ளார்.!

தமிழகத்தில் முதன் முதலாக கொரோனாவில் இருந்து மீண்ட ஒருவர் தனது பிளாஸ்மாவை தனமாக வழங்கியுள்ளார்

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்த ஒருவர் குறிப்பிட்ட நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பிறகு சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தனது பிளாஸ்மாவை தானமாக வழங்கியுள்ளார். தமிழகத்தில் முதன் முதலாக ஒருவர் தனது பிளாஸ்மாவை தனமாக வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

கொரோனாவில் இருந்து குணமடைவரின் ரத்தத்தில் கொரோனா வைரஸிற்கு எதிரான ஆன்டிபாடிகள் சுரந்திருக்கும். இதனால் கொரோனா வைரஸில் இருந்து மீண்டவர் குறிப்பிட்ட நாளுக்கு ( 28 நாட்கள் ) பிறகு எந்த வித பாதிப்பும் இன்றி நல்ல உடல் நலத்தோடு இருந்தால் ரத்த தானம் அளிக்கலாம்.

அந்த ரத்ததில் இருந்து பிரித்து எடுக்கப்படும் பிளாஸ்மாவின் மூலம் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க முடியும் என மருத்துவ வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர். பிளாஸ்மா பிரித்து எடுக்கப்பட்டவுடன் அந்த ரத்தமானது மீண்டும் பிளாஸ்மா தானம் அளித்தவரின் உடலுக்கே திருப்பி செலுத்தப்படும்.

இந்த பிளாஸ்மா சிகிச்சைக்கு தமிழகத்தில் சென்னை மற்றும் மதுரையில் உள்ள இரு மருத்துவமனைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.  

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.