கொரோனா காலகட்டத்திலும் உத்தரவை மீறி முழு கட்டணம் வசூலித்த 14 பள்ளிகளுக்கு நோட்டீஸ்!

கொரோனா காலகட்டத்திலும் உத்தரவை மீறி முழு கட்டணம் வசூலித்த 14 பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

கொரோனா வைரஸின் தாக்கம் தமிழகம் முழுவதிலும் நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டேதான் செல்கிறது. இருப்பினும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அரசு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக பாடங்களை நடத்த அனுமதித்து இருந்தாலும் இன்னும் சில மாதங்களில் பள்ளிகள் திறக்கப்படும் என்பதால் தற்போது பல பள்ளிகளில் மாணவர் சேர்க்கை மற்றும் கட்டணம் வசூலிக்கும் வேலைகள் நடைபெற்று வருகிறது. அனைத்து தொழிலாளர்களும் முடங்கி இருக்கக் கூடிய நிலையில் தனியார் பள்ளிகள் முழுவதுமாக கல்வி கட்டணத்தை வசூலிக்கக் கூடாது என ஏற்கனவே அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் செங்கோட்டையன், கொரோனா காலகட்டத்திலும் முழுமையாக கல்வி கட்டணத்தை வசூலித்த 14 பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளார். கொரோனாவின் தீவிரம், பெற்றோர் மாணவர்களின் மனநிலை ஆகியவை அறிந்துஅதன் பின்னரே பள்ளிகள் திறக்கப்படும் எனவும், செப்டம்பர் 21 முதல் 25 ஆம் தேதி வரை அணிவகுப்பு எதுவும் நடத்தக்கூடாது என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

author avatar
Rebekal