குயின், தலைவி படங்கள் வெளியாக எந்தவித தடையும் இல்லை! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!

  • குயின் (வெப் சீரிஸ்), தலைவி படங்கள் வெளியிடக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திரபட்டிருந்தது. 
  • மேற்கண்ட இரு படங்களும்  வெளியிட எந்தவித தடையும் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்தது. 

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்டுள்ள வெப் சீரிஸ் குயின் சீரிஸை கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் பிரசாத் முருகேசன் என இருவரும் எடுத்துள்ளனர். ரம்யா கிருஷ்ணன் முக்கிய ரோலில் நடித்துள்ளார். இந்த வெப் சீரிஸ் நாளை மறுநாள் MX பிளேயரில் வெளியாக உள்ளது.

அதே போல இயக்குனர் A.L.விஜய் இயக்கத்தில் தலைவி என்கிற திரைப்படமும் ஜெயலலிதாவின் வழக்கை வரலாற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வருகிறது. இப்படத்தில் ஜெயலலிதாவாக கங்கனா ரணவத் நடித்து வருகிறார்.

இந்த இரு படங்களும் வெளியிடக்கூடாது என ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணையில், இந்த இருபடங்களிலும் எந்தவித தவறாக கருதும் பதியப்படவில்லை என படக்குழு உறுதியளித்ததாகவும், இரு படங்களும் புத்தகங்களை தழுவியே எடுக்கப்படுவதால் எந்தவித தவறான கருத்துக்களும்  பதியப்படவில்லை.குயின் வெப் சீரிஸ் குழு இது ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படம் இல்லை என குயின் படக்குழு கூறியுள்ளது எனவும் ,

தலைவி படக்குழு விரைவில் இந்த படம் கற்பனையே எனும் அறிக்கையே வெளியிட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தவிர குயின் வெப் சீரிஸ் மற்றும் தலைவி படம் ரிலீசிற்கு எந்தவித தடையும் இல்லை என உத்தரவிட்டுள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.